Thursday 4 February 2021

தமிழ் மொழியின் சிறப்புகள் - Tamil Mozhiyin Sirappukal - Tamil language specials.

               This is one of the posts which I want to write for my blog since its name states so, But due to so many other works, it was not possible at all for a long time. But here in the US, I get a chance to write about my mother tongue Tamil for my elder one's Tamil school speech.  Actually, I want to thank his Kamban Tamil school to give me this opportunity to write this blog. Thank you so much for all the support and motivation by each and everyone, also special thanks to my தமிழ் 



       அமிர்தினும் இனிய தமிழ் மொழியின் சிறப்புக்களைப் பற்றி எனக்குப் ‌பேச  வாய்ப்பளித்த என் ஆசிரியருக்கும், எங்களை ஊக்குவிக்க வந்துள்ள நீதிபதி அவர்களுக்கும், மற்றும் என் சக மாணவர்களுக்கும் முதற்கண் எனது வணக்கங்களை உரிதாக்குகின்றேன்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"  
அன்றைக்கே சொன்னான் பாரதி
     



            அத்தகைய செந்தமிழ் நாட்டில் மற்றுமா தமிழ் பேசப் படுகிறது... சிங்கப்பூர் , இலங்கை ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும், மலேசிய, பர்மா, துளு  போன்ற நாடுகளில் பரவலா பேசப் படும் மொழியாகவும் தமிழ் மொழி  திகழ்கிறது. உலகில் உள்ள ஏழு கண்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் பரவியுள்ளனர், அவர்களால் தமிழ் மொழியும் பரவியுள்ளது.  
       

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி"


         என்ற புகழுக்குரிய தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி. அது மட்டுமா இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்டு  வெளியிடப்பட்ட மொழி என்னும் பெருமையும் தமிழ் மொழியைச்சாரும்.  இதற்கு மேலும் யுனெஸ்கோ இந்தியாவின்  பாரம்பரிய மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது.    

         "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்."
என்றான் பாரதி

   



        உலகில் ஏழு அதிசயங்களைப் பற்றித் தான் பேசுகின்றனர் ஆனால் எனக்கு என் தமிழ் மொழி தான் அதிசயம்.  இன்றைய தமிழ் மொழியில் ஆங்கிலமும் மற்றும் பிறமொழி  சொற்களும் பரவலா கலந்துள்ளது... அச்சொற்களை எல்லாம் நீக்கிவிட்டு தமிழை இயங்க வேண்டும் என்று சொன்னாலும் எந்த ஒரு தங்கு தடையும் இன்றி இயங்கும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு அதுவே தமிழைச் செம்மொழி என்று வழங்கக் காரணம் .  

        கன்னடம், தெலுங்கு, மலையாளம் , துளு ஆகிய மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ் மொழி தான் . தமிழ் மொழி இயல் , இசை , நாடகம் என்னும் முப்பிரிவுகளை கொண்டது.  அக்காலத்தில் சங்கம் வைத்து தமிழ் மன்னர்கள் தமிழ் மொழியை வளர்த்தனர். ஆதலால் திருக்குறள் , அகநானூறு, புறநானூறு, 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண்மேற்கணக்கு நூல்கள்  போன்ற  பல இலக்கிய இலக்கண நூல்கள் கிடைத்துள்ளது. திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை நூல்.  உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட  நூலும் அதுவே. 

                        "யாதும் ஊரே யாவரும் கேளிர்"

        -என்னும் உயரிய பண்பை உலகிற்கே சொல்லிக் கொடுத்த உன்னத மொழி நம் தமிழ் மொழி. அத்தகைய தமிழ் மொழியை இங்கு நியூ ஜெர்சியில் நாம் கற்பதற்கு ஏதுவாய் வழிவகை செய்த நம் கம்பன் தமிழ்ப் பள்ளிக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்களை உரித்தாக்குகின்றான்.  

"வீடுகள் தோறும் தமிழில் பேசுவோம் 
ஆடி பாடி நண்பர்களுடன் தமிழ் இசைத்து விளையாடுவோம் 
தமிழர்கள் அனைவரிடமும் தமிழில் உரையாடுவோம்."

-என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.


Here is the short video of my son doing the part of this speech... Thanks for reading this blog, feel free to comment if you like this write up. See you in my next post... Byeeee.....




 

தமிழ் மொழியின் சிறப்புகள் - Tamil Mozhiyin Sirappukal - Tamil language specials.

               This is one of the posts which I want to write for my blog since its name states so, But due to so many other works, it was n...